காதல் கடிதம்.... பிரியமானவளே!

பிரியமானவளே ...
அன்று ஓர் நாள் ...
உன்னை சந்தித்துகொண்டபோது 
கண்கள் மட்டும் எனக்குள் சொல்ல்லிக்கொண்டது - இவள் 
என் காதலி என்று......
நானும் உன்னை தொட்டு சென்ற காற்றிடம் ரகசியமாக சொல்லிவிட்டு சென்றேன் - இவள் என் மனைவியாவாள் என்று...!

பிரியமானவளே ...
எப்போதும் உன் உதடுகள் மட்டுமே - சல சலவென 
என்னோடு பேசிக்கொள்ளும்.....
இப்போதெல்லாம் உன் விழிகளே அதிகமாக என்னோடு பேசிக்கொள்ள ..
இதழ்கள் மௌனமாகின்றன..!

பிரியமானவளே ....
உன் விழிகளின் கரு மையை கொண்டுவா.....
உன் கால் கொலுசின் சப்தங்களின் நடுவே - உனக்காக 
ஓர் காதல் கடிதம் வரையவேண்டும் - என் உயிரினில் !

பிரியமானவளே ....
இதயங்கள் இணைந்துகொள்ள ...
இதழ்கள் பேசிகொண்ட - இன்பமான 
அந்த பொழுதுகளில் உன் விழிகளினால் நீ வரைந்த - எனக்கான 
கடிதங்களை இன்றும் நான் தேடுகின்றேன்...!

பிரியமானவளே ...
உன்னை கண்ட நாள் முதல் ...
உனக்காக நான் எழுதிய காதல் கடிதங்களுக்காக ... 
காதல் - எனக்காக எழுதி தந்த கடிதமே - நீ ....!
என் ஆயுளின் அந்தி வரை பத்திரபடுத்தி வைத்திருக்கின்றேன் !...

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

1 Response to "காதல் கடிதம்.... பிரியமானவளே!"

 1. S.Sudharshan says:
  April 17, 2011 at 6:44 p.m.

  //நானும் உன்னை தொட்டு சென்ற காற்றிடம் ரகசியமாக சொல்லிவிட்டு சென்றேன் - இவள் என் மனைவியாவாள் என்று...!//

  வித்தியாசமான சிந்தனை ..வாழ்த்துக்கள் ..:-)