மழை

                                                      தூறல்களின் நடுவே ....
தடயங்களை தேடி காத்திருக்கிறேன் ...
நீ வருவாய் என்னை தொடுவாய்  என ...
தேடி பார்க்கின்றேன் தொலைவானில் - உன் 
வருகைக்காய் வீசப்படுகின்றன சாமரங்கள் .

தவறவிட்ட நிமிடங்களுக்காய் ...
காத்திருக்கையில் காதோரம் அவள் செய்தி சொல்லிசென்றது - காற்று 
தூறல்களாய் சிணுங்க ஆரம்பித்தவள் ... 
எனக்காய் முழுவதும் தந்துவிட்டு சென்றாள்.

காதல் கற்று தந்த பாடம் - உன்னை நேசிப்பது 
நீ சொல்லி தந்த பாடம் - காதலை சுவாசிப்பது...
மெல்ல மெல்ல ஆரம்பித்து அந்தி வரை கூட இருந்து விட்டு ..
எங்கு சென்றாய் ... உன் அடை மழைக்காய் ...
அடம்பிடிக்கின்றேன் தினமும் இன்றுவரை ..  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "மழை"