இருட்டிக்கிடக்கிறது என் வாழ்வும் அவர்களை போல் ..!
என்ன சொல்ல .....
எழுதுவதற்கு மனமும் இல்லை...
சொல்லுவதற்கு வார்த்தைகளும் இல்லை என்னிடம்
இருட்டிக்கிடக்கிறது என் வாழ்வும் அவர்களை போல்
எட்டி பார்கிறேன் எங்காவது விடியல் தெரிகிறதா என்று...
இன்னும் இல்லை ...இனியும் இல்லையா ...
ஏக்கமாய் இருக்குது ......
அந்த நாட்கள்
அந்த செய்திகள்
அந்த நிமிடங்கள்
அண்ணா....!
இன்றோடு ஒன்றாகிவிட்டது ஆண்டும் ..
தெரிந்துகொண்டும் ஏற்க்க மறுக்கிறது என் இதயம் ..
மனித்துகொள்ளுங்கள்- புகலிடம் தேடி ஓடியவர்களில் நானும் ஒருவன் ...
இன்று உங்களுக்காய் ஒன்றும் செய்யதவர்களிலும் நானும் ஒருவன் ..
சொல்ல தெரியவில்லை .....
கனத்த இதயத்தின் வலிகளோடும் ஏக்கத்தோடும் ....
ரணங்களோடும் நகர்ந்து கொண்டிருக்கு - என் நாட்கள் நடைபிணமாய்..!











September 13, 2010 at 3:26 a.m.
போருக்கெதிரான எனக்கு கைகொடுப்பீர்களா..? நீங்கள் போட்டுள்ள படங்களை நேரில் பார்த்தவன்...
http://mathisutha.blogspot.com/2010/08/blog-post_3222.html
http://mathisutha.blogspot.com/2010/08/blog-post_08.html