ஆட்டம் காணும் ஜெயசூரியாவின் ஆடுகளம் ..!
சனத் ஜெயசூரிய - இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி சகலதுறை துடுப்பாட்ட வீரர்.30 June 1969 (age 40). மாத்தறையில் பிறந்தவர். ஆரம்பத்தில் பூளும் பீல்ட் அணிக்காக விளையாடி 1989-90 காலப்பகுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்பேணில் நடைபெற்ற ஒருநாட் போட்டியில் அறிமுகமானார். இவரது முதல் டெஸ்ட் போட்டி1990-91 காலப்பகுதியில் ஹமில்ரனில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியாகும்.

 ஒரு காலத்தில் பந்து வீச்சிலும் துடுப்பாட்டத்திலும் களங்கள் கண்ட சனத்தின் கைகள் இப்போது சோடை போக ஆரம்பித்துவிட்டன. இதனால் இலங்கை அணிக்குள்ளும் எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளன. நாடாளுமன்ற உறுபினராக மாறிய பின்னர் தொடர்ந்தும் விளையாடுவேன் என சனத் தெரிவித்திருந்தாலும், இன்னமும் பழைய சனத் வெளிவரவில்லை என்றே சொல்லலாம். இதற்கிடையில் இவரை அணியில் தொடர்ந்து வைத்திருக்கவேண்டும் என்று மகிந்தவின் பரிவாரங்களும் புதல்வர்களும் அணியின் நிர்வாகத்துக்கும் தலைமைக்கும் அழுத்தங்கள் கொடுத்துள்ளன. ஆனால் அவர் இவ்வாறு சிறப்பாக விளையாடாமல் இருந்து அணிக்கு பாரத்தை  சேர்ப்பதால் ஏனைய இளையவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க முடியாமல் உள்ளதாக எதிர்ப்பவர்களின் இன்றைய நிலைப்பாடு. உண்மையில் இதை உணரவேண்டியவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனால் அவரோ மக்களின் விருப்பத்துக்காகவே   தான் விளையாடுவதாகவும் இதை தான் அன்பளிப்பாக  கருதவில்லை எனவும் இந்திய பத்திரிகையான தெகல்கா வுக்கு தெரிவித்துள்ளார். தானில்லாமலே தன்னுடைய குடுப்பம் பிரசாரத்தில் ஈடுபட்டு தான் வெற்றி பெற்றதாகவும் அடுத்த உலககிண்ணம் இலங்கையில் இடம்பெறுவதால் அதன் போது தான் விளையாடுவதையே  தன ரசிகர்கள் விரும்புவதாகவும் ஆதலால் தற்போது அணியிலிருந்து விலகுவதை விருப்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார். அரசியல் - மக்களுக்கு சேவை செய்யவும் விளையாட்டு மக்களை சந்தோஷப்படுத்தவும்  என மன்னர் பஞ்ச் வசனத்தில் பதிலளித்துள்ளார்.

இது ஒருபுறமிருக்க அணியின் தலைவர் சங்கக்கார தன்னால் இயன்றளவு இந்தமுறை உலககிண்ண போட்டிகளின் போது எதிர்ப்பை காட்டியிருந்தும் அதற்கு ஜெயசூரிய மசிந்த பாடில்லை. இப்போது அவர் தெரிவித்திருக்கும் விடயம் என்னவென்றால் தொடர்ந்தும் ஜெயசூரிய விலகாமல் விட்டுகொடுக்காமல் நத்தை போன்று இருப்பார் எனின் அணி தலைவர் பதவியில் இருந்து விலக உள்ளதாக தெரிவித்துள்ளார். சங்கக்கராவுக்கு அணியின் முக்கிய வீரர்களும் இளையவர்களும் கூடவே அணிக்கு வெளியே ஜெயசூரியாவின் எதிர்ப்பாளர்களும் ஆதரவு வழங்கியுள்ளனர். 

இந்த செய்தி மகிந்தவின் காதில் விழுந்ததாலோ என்னவோ அன்னார் அன்புமிகு நா.ஊ ரை தொலைபேசியில் அழைத்து இனி தொகுதி மக்களுக்கு  சேவை செய்யலாமே கொஞ்சம் களத்திளிருந்துவிலகலாமே என்று பேசியதாகவும் அதற்கு ஜெயசூரிய ஒழுங்காக பதிலளிக்கவில்லை எனவும் இன்று காலை சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளதுடன் மகிந்த தன மகன் நாமளிடம் இனி ஜெயசூரியவுக்காக எந்த அழுத்தங்களையும் செய்யவேண்டாம் என்றும் கூறியுள்ளதாக தெரிவிக்கின்றது.  எனவே கோப்பைகளையும் வெற்றிகளையும் கொவித்தவர் கதி என்று .......... என்னதான் இருந்தாலும் மானஸ்தன் ஜெயசூரிய .... ஏன் எண்டு கேட்கிறீங்களா..... என்னதான் நீங்க என்னை மாத்தி போட்டாலும் சான்ஸ் தராட்டிலும் நான் கொஞ்சம் கூட மாறமாட்டேன் எண்டு இறுமாப்போடு மனுஷன் இருக்குது ....வாழ்க- இலங்கை 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "ஆட்டம் காணும் ஜெயசூரியாவின் ஆடுகளம் ..!"