ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை .... அண்ணனுக்கு எங்கள் அன்பு வாழ்த்துக்கள்...!


ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை
நீ இருக்கும் இடத்தை அறிந்து கொள்ள நாதி யற்றவர்கள் - நாம் இங்கே ...
அன்றே உன் பின்னால் வந்திருந்தால்...

இன்று உன்னோடு ஒன்றாய் கண்டிருப்போம் தமிழீழம்..
இன்று சொல்கின்றோம் - நீ பிறந்த நாளில் நாம் நிமிர்ந்த நாளில்
நீ வரும்வரை உன் பணி தொடர்ந்து உனக்காய் காத்திருப்போம்,

அண்ணா - நீ இருப்பாய்
இறை உள்ளவரை
இந்த உலகம் உள்ளவரை

எங்கிருந்தாலும் உனக்காக இனி என்றும் நாங்கள்...!
கறைகள் படிந்த நாட்கள் இன்னும் தொடர அதை கழுவி சென்ற உன் பிறந்த நாளில்
உனக்காய் ஓர் வாழ்த்து ....!நீ வாழிய…!
தமிழன் - தலைவன்
இரண்டும் ஒன்றுதான் எனக்கு….
நீ – அண்ணா
இரண்டும் ஒன்றே எனக்கு ……
பிரபஞ்சம் - பிரபாகரன்
இரண்டும் ஒன்றுதான் எனக்கு….

அண்ணா…
பிரபஞ்சம் உள்ளவரை – நீ வாழ்வாய்…
நீ வாழும்வரை நாம் வாழ்வோம்….
ஆக - இரண்டும் எனக்கு – நீயே…

இன்று உன் பிறந்த நாள் - அல்ல
நாம் நிமிர்ந்த நாள் - இன்னும்
தமிழீழம் தெரிந்த நாள் - சிங்களம்
தம்மை உணர்ந்த நாள்…..

“நம்பிவருவோரை தம்பி விடமாட்டானாம்”
வந்தவர்களும் சென்றவர்களும் - சொன்னது…
நீ – பிறந்த நாளில் எனக்கும் ஓர் வேண்டுகோள்…

நீ இருப்பாய் - நீ இறைவன்….
நான் மனிதன் - இறப்பேன் நான்
இருக்கும்போதே என் நாடு எனக்கு வேண்டும்…..
உன்னோடு நான் உறவாட ஓர் நிமிடம் வேண்டும்…

தருவாயா…. நீ தருவாய்..!
காத்திருக்கின்றேன்… உன் கடைசி அழைப்பிற்காய்..!
அதுவரையிலும் விடைகொடு….
உனக்கு ஓர் வாழ்த்து சொல்ல…..

அண்ணா..! பாவலனும் பண்டிதனும்
பாமரனும் சொன்னார்கள்…
புகழ்வது உனக்கு பிடிக்காதாம் - பாவம்
அவர்களுக்கு புரியவில்லை….

கவிதையும் காலமும் கலையும் - கரிகாலனை
புகழவில்லை … நடந்துகொண்டிருக்கும் தர்மயுத்தத்தில்;
வாழ்ந்து கொண்டிருக்கும் பார்த்த சாரதியின்
அத்தியாயங்கள் சரிதங்களாய் - தீட்டப்பட்டுக்கொண்டிருக்கின்றன…

வார்த்தையிருந்தும் வயதில்லை – நீ வாழிய…!

இங்ஙனம்
நிலத்தின் நினைவுகளோடு புலத்தில் வாழும் உன் தம்பிகளில்
ஒ ரு வ ன்..!

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

1 Response to "ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை .... அண்ணனுக்கு எங்கள் அன்பு வாழ்த்துக்கள்...!"

 1. லெமூரியன்... says:
  November 26, 2009 at 9:35 a.m.

  கவிதை அருமை நண்பா...!
  தலைவன் ஆதவன்....! உலகம் அழியும் வரை தலைவனின் புகழும் வீரமும் பேசப்படும்...!