வழி இருந்தும் வலியை போக்கமுடியவில்லை..!
நெஞ்சை பிளக்கும் சில நொடிகள்....

நினைவுகள் உனதாய் இருந்தாலும் இதயத்தால் ஒத்துகொள்ள முடியவில்லை....
காலங்கள் ஓடியிருந்தாலும் இன்னமும் கண்ணுக்குள் வந்து வந்து போகின்றன ....
உன் மடியில் தலை சாய உன் விரல்கள் முடிகோத ....விழி நான்கும் கதை பேச..
இதழ்கள் நான்கும் மௌனித்து போக..
உள்ளங்கள் விறைத்து நின்ற அந்த பொழுதுகள்..

பேசி விட்டு ஜோசிக்கும் போதெல்லாம் .... இமைகள் மூட மறுக்கின்றன ... விழிகளின் ஈரம் காய முன்னே இதயம் இறுகி நிற்கின்றது ...
உனக்கும் எனக்குமான சாட்சியம் இருந்தும் ....
விரும்புகின்ற பொழுதெல்லாம் வெறுக்கின்றது ஏனோ உன் இதயம்..
நீ சொல்வதை நான் புரிந்துகொண்டாலும் நான் சொல்வதை புரிய ஏன் மறுக்கிறாய் - நீ
உதறிவிட்டேன் என்று சொல்லிக்கொண்டாலும் உன் உள்ளம் இன்னும் இடம் கொடுக்கவில்லையே...
உணர்ந்தாலும் - நீ சொல்ல மறுக்கிறாயே ....

தேடியும் தெரியவில்லை உன்னிடமிருக்கும் பதில்.
தடையை உடைத்து வெளியே வரலாம் .. ஆனால்
நான் வரமாட்டேன் ... இது நீ போட்ட தடை -
நான் வரமாட்டேன் ... இது நீ போட்ட தடை -
எடுக்கவும் உடைக்கவும் உன்னால் தான் முடியும்... காத்திருக்கின்றேன் ... மறு வாழ்வுக்காய் ஒரு கணம் ..!
***---------------------------------***
March 18, 2009 at 9:46 a.m.
Enna unmaiyana valiya alla katpanai valiya?. Ethuvayirunthaalum nalla thaan irukkongooo..
Karan, London