யார் ஏறினாலும் ஓடுவேன் ஆனால் நீ..... தமிழன் - நீ மட்டும் ஏறாதே..!

ன்றைய நாளில் மிக முக்கியமான
கேள்வி பலர் மனதில் எழுகின்றது.
சிங்களத்தால் தமிழர்கள் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் தமிழர்களின் முடிவு தான் என்ன ?. விடை தேடித்தான் பார்க்கவேண்டும். ஏறக்குறைய கடந்த 30 வருடங்களாக தமிழர்களின் உரிமைக்கக்காகவும் தாய்
மண்ணுக்காகவும் போராடிவரும் ஓர் இயக்கமாய், அமைப்பாய் இருப்பது தமிழீழ விடுதலை புலிகள் மட்டுமே. எத்தனையோ இயக்கங்கள் தோன்றினாலும் உரிமைகளை விட்டுகொடுக்காது வளர்ச்சி பெற்று அர்ப்பணிப்புடன் செயல்பட்டுவருகின்ற அமைப்பாய் அவர்களுக்கே இடமுண்டு.
ஓர் பக்கம் தங்கள் இலாபத்துக்கு தாய் மண்ணையும் மக்களையும் விற்கும் கூட்டம். இன்னொரு பக்கம் தமிழரை வாழ விருப்புவோரை காட்டிகொடுக்கும் கூட்டம். இதற்கு நடுவில் இரண்டையும் நடத்தி இனத்தையே அழிக்கலாம் என்ற முனைப்போடு சிங்களம். சரி , இதுதான் நாடு எனவே சர்வதேசமாவது உதவுமே என்றால் அது கூட கடிவாளம் போட்ட குதிரை போல கொள்ளை மட்டும் தின்றுகொண்டிருக்குது. யார் ஏறினாலும் நான் ஓடுவேன் ஆனால் தமிழன் நீ மட்டும் ஏறினால் நான் ஓடமாட்டேன் என்ற நிலைப்பாட்டில் இன்றைய உலக அரசியல்.

நோர்வே ஆரம்பித்து வைத்து இந்தியாவும் சீனாவும் ஜப்பானும் அமெரிக்காவும் இங்கிலாந்தும் ரஷ்ஷியாவும் தாளம் போட சிங்களம் ஆடிய பெரகரா நடனம் தான் போர் நிறுத்தமும் சமாதான பேச்சும்.... எப்பொழுதெல்லாம் நாங்கள் பலமாக இருக்கின்றோமோ அப்பொழுதெல்லாம் சர்வதேசமும் சிங்களமும் எங்களை சரிசமனாய் உட்காரலாம் வாருங்கள் என்று அழைக்கும் என் அப்ப்பவே திலீபன் சொன்னான். இன்னும் கூட அதை ஏன் எங்கள் சமுகம் புரிந்து கொள்ளவில்லை என்பது தான் கவலைக்குரிய விடயம். சற்று ஜோசித்து பார்த்தால் சிங்களம், சமாதான காலத்தில் எத்தகைய மாற்றத்தையும் எங்கள் மக்களுக்கு ஏற்படுத்தாது மாறாக இழிவுகளையும் அழிவுகளையும் ஏற்படுத்தியதை புரிந்துகொள்ளலாம்.

சிங்களத்துக்கு தலைதடவும் கூட்டங்களால் இன்று ஓர் வசனம் சொல்லப்படுகின்றது அதாவது, புலிகள் வேறு தமிழர் வேறு என்பது தான் அது. இப்படி சொல்லுகின்றவர்களிடம் ஒரேஒரு கேள்வி கேட்கின்றேன். புலிகள் / போராளிகள் எங்கிருந்து வந்தவர்கள்?. எந்த இடத்தில் இருந்து போராடுகின்றார்கள். அந்த இடத்தில் இருக்கின்ற மக்கள் யார்?. இதற்கான விடை தமிழீழம், தமிழர். அப்படியாயின் தமிழர்கள் தானே போராடுவதற்கு போராளிகளாக களமாடுகின்றனர். எனவே தமிழீழத்தில் வாழும் தமிழர்கள் தானே விடுதலைப் புலிகள். என்ன செய்வது விளங்கியும் விளங்காத வெளிநாட்டவரை ஒன்றுமே செய்யமுடியாது. காரணம் , சிங்களத்தின் ஆழமான பரப்புரைகள். சரி, இதை தெரிந்துகொண்டதால் ஒவ்வொரு தமிழனும் தன்னால் முடிந்தளவிற்கு எதோ ஓர் வடிவத்தில் முறியடிப்பு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்ற இந்த நாட்களில் தன்னுடைய நாடகத்தில் இன்னொரு அங்கத்தை சேர்த்திருக்கின்றது. மஹிந்தவின் தயாரிப்பில் இந்தியாவின் இயக்கத்தில் சர்வதேசத்தினதும் ஐ.நா வினதும் வேகமான விளம்பரத்தில் அந்த அங்கம் பரபரப்பாய் ஊடகங்களில் வெளியாகியது. அதாவது , புலிகள் ஆயுதங்களை கிழே போட்டால் தான் போர் நிறுத்தம். ஆப்பாவி மக்களை புலிகளே கேடயங்களாக்கி சுட்டுக்கொல்லுகின்றனர்.

இதற்க்கு புலிகள் பதில் கொடுத்தாலும் இதை முன்வைத்த உலகத்திடமே அதற்கான பதிலுமுண்டு. அதாவது, ஓர் ஆயுதக்குழுவாய் புலிகள் இல்லை. சகல போர் கட்டமைப்பையும் கொண்ட ஓர் மக்கள் படை. அதனால் தான் பேச்சு வார்த்தைக்காக பலதடவை சர்வதேசமே அவர்களை அழைத்திருக்கின்றது. 30ஆண்டு காலமாய் மக்களுக்காக போராடும் இயக்கம் அதாவது சர்வதேசத்தால் ரேபெல்ஸ் (rebels) என்று சொல்லப்பட்டு வந்தவர்கள் மக்களை கொலை செய்யமுடியும். இறுதியாக அவ்வாறு மக்களை கொலை செய்யும் அமைப்புக்கு எப்படி சர்வதேச ரீதியில் ஆதரவாக அந்த மக்களை போராடுவார்கள். எனவே இங்கும் சிங்களத்தின் பிரச்சரப்பிரங்கியே காரணம். உண்மையில் புலிகள் அவ்வாறு செய்கின்றார்கள் என்றால் ஏன் சிங்களத்தால் சர்வதேசத்தின் ஊடகவியலாளர்களை அங்கே அழைத்து செல்லமுடியவில்லை அத்துடன் தாங்கள் சொல்லவதை மட்டும் எழுதவேண்டும் என்றும், நட்சத்திர விடுதிகளில் மட்டும் தங்க அனுமதி கொடுக்கப்பட்டு குறுகிய நாட்களில் திருப்பி அனுப்புகின்றனர். கூடவே , கெஹலிய , பசில் , கோதபாய , ரோஹித போன்றோரால் முன்னுக்கு பின் முரணான கருத்துக்களும் வெளியாகுவதும், அற நிலைமைகளுக்கும் சிங்களத்தின் பலர் ஓர் எடுத்துக்காட்டு. தத்துவாசிரியர் அன்டன் பாலசிங்கம் குறிப்பிட்டது போன்று ஆயுதங்களை புலிகள் பயன்படுத்தினாலும் அதன் உரிமையாளர்கள் தமிழர்களே எனவே அதை போட சொல்லவோ அல்லது அதைப்பற்றிய கேள்விகளுக்கும் அவர்களே பொறுப்பு.

நாளடைவில் எமது உறவுகள் அழிக்கப்பட்டுகொண்டும், இன்னொரு புறத்தில் தாங்கள் தலைமையை இதோ பிடிக்கபோறோம், புலிகள் இனி இல்லை என்று சிங்களம் ஆழிக்கூத்து ஆடுகின்றது. இதன் தீர்வு தான் என்ன?

சரி, சிங்களத்தின் ஆசையின் படியும் சர்வதேசத்தின் விருப்பத்தின் படியும் புலிகள் ஆயுதங்களை கிழே போட்டு விட்டார்கள், அவர்களை அழித்தும் முடிந்தது. எல்லா இடங்களும் மஹிந்தவின் கீழ். சரி நீங்கள் சொன்னபடியே எல்லாம் முடிந்து விட்டது. தமிழர்களுக்கு என்ன தான் தீர்வு?. ஒன்றுமே கிடைக்காது. பொன்சேகா கூறியது போல் இருக்க இடமும் சாப்பாடும் தருவோம் இருந்திட்டு இறந்திட்டுப்போங்கள் என்றுதான் வாழவேண்டும். கருணாவும் பிள்ளையானும் டக்ளசும் ஆனந்த சங்கரியும் சேர்த்து உரிமை தரமாட்டினம் இன்னும் எங்களை உரிச்சு கொடுப்பினம். சிங்களம் அதற்கு பிறக்கும் சும்மா இருக்காது. இந்த நால்வருக்குள்ளும் பத்தவச்சிட்டு பார்த்துக்கொண்டிருக்கும். அதுதான் இலங்கையின் அரசியல் யாப்பு. எங்களுக்கான ஆப்பு.

ஆக, இன்றைய நாட்களில் நடந்து கொண்டிருக்கும் அவலங்களை நிறுத்த வேண்டுமாயின் நாங்கள் செய்யவேண்டியதும் பரப்புரையும் போராட்டமும்தான். எப்படி இன்று நாங்கள் கூப்பிட சர்வதேசம் வேடிக்கை பார்க்கின்றதோ , அதேபோன்று என்றோ ஒரு நாள் சிங்களம் கூப்பிடும் அப்பொழுது இவர்கள் வருவர்கள். அன்று நாங்கள் இருமாம்போடு எழுந்து நிற்கவேண்டும். அதற்கு நீங்கள், நாங்கள் செய்யவேண்டியது. கிடைத்திருக்கின்ற தலைமையை நம்பவேண்டும். செய்தவனுக்கு, செய்துகொண்டிருப்பவனுக்கு, நிச்சயம் செய்யத்தெரியும் அவன் செய்வான் அதற்கு நாங்கள் அவனுக்கு எப்படி கரம் கொடுக்கவேண்டும் என்ற தேவை அறிந்து செயட்படவேண்டும். புலம் பெயர் மக்களால் முடியாதது என்று ஒன்றுமே இல்லை. ஆனால், புரியாமல் இருப்பது தான் வேதனையான விடயம். இன்று நாங்கள் சொல்வதை கேட்கின்ற நிலைக்கு உலகம் இறங்கியிருக்கின்றது என்ற நிலையில் , உள்ளதை உணர்ந்து செயற்பட்டால் எமக்கும் வழி பிறக்கும் அதுவே இன்றைய நாளுக்கான இறுதி சங்கு.
*************************************************************

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

1 Response to "யார் ஏறினாலும் ஓடுவேன் ஆனால் நீ..... தமிழன் - நீ மட்டும் ஏறாதே..!"

 1. Anonymous Says:
  February 25, 2009 at 8:10 p.m.

  Vanakkam,
  Ellarum sollalam seiyirathu kasdam, MMM neenga sollurathum sari aanal athatku ottumai thaan mukkiyam.. athai muthala theparungo.